கடவுள் என்று ஒன்று உண்டா? part-3- திருமுருக கிருபானந்தவாரியார்

கடவுள் என்று ஒன்று உண்டா? 

திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் இயற்றிய “ வாழும் வழி ” என்ற புத்தகத்திலிருந்து.

ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார்.அங்கே ஒரு மாணவன் சென்றான்.அம் மாணவன் மிடுக்கும் சொல் துடுக்கும் உடையவனாக காட்சியளித்தான்.

“ ஐயா பெரியவரே !ஏன் உட்கார்ந்து கொண்டே துங்குகின்றீர்? சுகமாக உட்கார்ந்து கொண்டே உறங்கும்.”

“தம்பி,நான் உறங்கவில்லை.கடவுளைத் தியானிக்கிறேன்.”

“ஓ ! கடவுள் என்று ஒன்று உண்டா? ஐயா,நான் M.A. படித்தவன்.நான் முடன் அல்ல.நுலறிவு படைத்தவன்.கடவுள் கடவுள் என்று கூறுவது முடத்தனம்.கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா? ”

“ தம்பி,காண முயலுகிறேன்.”

“கடவுளை கையால் தீண்டியிருக்கின்றீரா?”

“இல்லை.”

“கடவுளின் குரலை காதால் கேட்டீருக்கின்றீரா?”

“இல்லை.”

“கடவுள் மீது வீசும் மணத்தை முக்கால் மோர்ந்திருக்கின்றீரா?”

“இல்லை.”

“ ஐயா ! ,என்ன இது முட நம்பிக்கை?உம்மை அறிவற்றவர் என்று கூறுவதில் என்ன தடை?கடவுளை கண்ணால் கண்டீரில்லை.முக்கால் மோந்தீரில்லை.கையால் தொட்டீரில்லை.காதால் கேட்டீரில்லை. இல்லாத ஒன்றை இருப்பதாக்க் கற்பனை செய்து கொண்டு,அரிய நேரத்தை வீணடிக்கின்றீரே?உம்மைக்கண்டு நான் பரிதாபப் படுகின்றேன்.உமக்கு வயது முதிர்ந்தும்,மதிநலம் முதிரவில்லையே? பாவம்,உம் போன்றவர்களை காட்சி சாலையில் வைக்க வேண்டும். கடவுள் என்றீரே,அது கறுப்பா?சிவப்பா? ”

“ தம்பி,உன் சட்டைப்பையில் என்ன இருகின்றது? ”

“ இது தேன் பாட்டில்.”

“ அப்பா,தேன் இனிக்குமா?கசக்குமா? ”

“என்ன ஐயா ! இது கூட உமக்குத் தெரியாதா? சுத்த மக்குப் பிண்டமாக இருக்கின்றீர்? உலகமெல்லாம் உணர்ந்த தேனை இனிக்குமா கசக்குமா என்று வினாவுகின்றீரே.உணவுப் பொருள்களிடையே தேன் தலைமை பூண்டது.இது அருந் தேன்.இதை எவன் அருந்தேன் என்று கூறுவான்? அதற்காக இருந்தேன் என்பான்.தேன் தித்திக்கும்.இதை எத்திக்கும் ஒப்புக்கொள்ளும்.”

“தம்பி ! தித்திக்கும் என்றனையே.அந்த இனிப்பு என்பது கறுப்பா?சிவப்பா?சற்று விளக்கமாக விளம்பு.நீ நல்ல அறிஞன்.”
மாணவன் திகைத்தான்.தித்திப்பு என்ற ஒன்று கறுப்பா சிவப்பா என்றால்,இந்த கேள்விக்கு என் விடை கூறுவது என்று திக்கித் திணறினான்.

“ ஐயா ! தேனின் இனிமையை எப்படி இயம்புவது?இதைக்ண்டவனுக்குத் தெரியாது.உண்டவனே உணர்வான்.”

பெரியவர் புன்முறுவல் பூத்தார். “ அப்பா,இந்தப் பௌதீகப்பொருளாக, ஜடவஸ்துவாக உள்ள தேனின் இனிமையையே உரைக்க முடியாது. உண்டவனே உணர்வான் என்றனையே? ஞானப் பொருளாக,அனுபவ வஸ்துவாக விளங்கும் இறைவனை அனுபவத்தால் தான் உணர்தல் வேண்டும்.”

மாணவன் வாய் சிறிது அடங்கியது.” பெரியவரே எனக்கு பசிக்கின்றது.சாப்பிட்டுவிட்டு வந்து உம்முடன் உரையாடுவேன்.”

“தம்பி ! சற்று நில்.பசி என்றனையே,அதை கண்ணால் கண்டிருக்கின்றனையா? ”

“இல்லை.”

“பசி பேசுவதைக் காதால் கேட்டிருக்கின்றனையா?”

“இல்லை.”

“பசியை முக்கால் மோர்ந்திருக்கின்றனையா? ”

“இல்லை.”

“ பசியை கையால் தொட்டிருக்கிற்னையா? ”

“ இல்லை.”

“ என்ன தம்பி ! உன்னை நீயே அறிஞன் என்று நீயே கூறிக்கொள்கிறாய். பசியை கண்ணால் கண்டாயில்லை.காதால் கேட்டாயில்லை.முக்கால் மோந்தாயில்லை.கையால் தொட்டாயில்லை.அப்படியிருக்க அதை எப்படி நம்புவது? பசி பசி என்று உரைத்து உலகத்தையே ஏமாற்று கின்றாய். பசி என்ற ஒன்று கிடையவே கிடையாது.இது சுத்தப் பொய்.பசி என்ற ஒன்று இருக்கின்றது என்று கூறுபவன் முட்டாள்.”

உனக்கு இப்போது புரிகிறதா? பசி என்ற ஒன்று அனுபவப்பொருள்.அது கண்ணால் காணக்கூடியதன்று.அதுபோல்தான் கடவுளும் அனுபவப் பொருள்.அதைத் தவம் செய்து மெய்யுணர்வினால் உணர்தல் வேண்டும்.

மாணவன் உடம்பு வேர்த்தது.தலை சுற்றியது.இந்தக்கிழவர் கூறுவதில் உண்மையுள்ளது என்று உணரத் தலைப்பட்டான்.

“ஐயா ! வணக்கம்.இப்போது என் அறியாமையை உணர்கிறேன்.ஒரு சந்தேகம்.கடவுளைக் கண்ணால் கண்டால்தான் நான் ஒப்புக் கொள்வேன்.நீர் சிறந்த முனிவர்.கடவுளைக் காட்ட முடியுமா? 

PART 2 Click below
http://manchavanapathy.blogspot.com/2013/11/GOD-IS-WHO.html

0 comments:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP